ராணுவ அதிகாரிக்கு பெங்களூருவில் சிகிச்சை: டாக்டர்களிடம் நேரில் விசாரித்த கவர்னர், முதல்-மந்திரி

கர்நாடக கவர்னர் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு வந்து வருண் சிங்கின் தற்போதைய நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.
குரூப் கேப்டன் வருண்சிங் சிகிச்சை பெற்று வரும் கமாண்டோ மருத்துவமனையை படத்தில் காணலாம்.
குரூப் கேப்டன் வருண்சிங் சிகிச்சை பெற்று வரும் கமாண்டோ மருத்துவமனையை படத்தில் காணலாம்.
Published on

பெங்களூரு :

தமிழ்நாட்டில் நடைபெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். ராணுவ அதிகாரியான கேப்டன் வருண்சிங் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

அவருக்கு குன்னூர் ராணுவ ஆஸ்பத்திரியில் முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேல்சிகிச்சைக்காக அவர் பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டு கமாண்டோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடக கவர்னர் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் அந்த ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து வருண் சிங்கின் தற்போதைய நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தனர். அவர் விரைவாக குணமடைய வேண்டும் என்று தங்களின் விருப்பத்தை கூறிவிட்டு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com