கேரளாவில் தொடர் மழை நாளை வரை நீடிக்கும்: பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடித்தது. கடலில் ராட்சத அலைகள் எழும்பக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.
கேரளாவில் தொடர் மழை நாளை வரை நீடிக்கும்: பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடித்தது. இதன் காரணமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கேரள பல்கலைக்கழகம் நடத்தவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் நாளை (5-ந்தேதி) வரை இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும், மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடலில் ராட்சத அலைகள் எழும்பக்கூடும் என்பதால்கடலில் ராட்சத அலைகள் எழும்பக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வந்தாலும், வழக்கத்தைவிட இந்த ஆண்டு பருவமழையின் அளவு குறைந்தே இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com