Assam polls | அசாம் சட்டசபை தேர்தல்: இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

Assam polls | அசாம் சட்டசபை தேர்தல்: இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
Published on
Summary

அடுத்த மாதம் அசாம் மாநிலத்தில் தேர்தல் நடத்தப்படலாம். தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களோடு அசாம் மாநிலத்திலும் விரைவில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது.

அடுத்த மாதம் அசாம் மாநிலத்தில் தேர்தல் நடத்தப்படலாம். தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. தற்போது வரை அசாம் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே, 42 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டது. அதில் அசாம் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கவுரவ் கோகாய் ஜோர்காத் தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சட்டசபை கட்சித் தலைவர் தேபப்பிரதா சைகியா நஜிரா தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ரிபுன் போரா பார்சல்லா தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், இரண்டாம் கட்டமாக 23 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.

126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் 2016-ம் ஆண்டு ஆட்சியை இழந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com