

சில நாட்களுக்கு முன்பு தோன்றிய நையாண்டி இணையதளமான 'காக்ரோச் ஜந்தா பார்ட்டி', இன்ஸ்டாகிராமில் 6.6 மில்லியனுக்கும் அதிகமான பாளோயர்களை கொண்டுள்ளது.
அந்த இணையதளத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை, படங்கள் மற்றும் ரீல்ஸ் உட்பட சுமார் 50 பதிவுகள் பகிரப்பட்டுள்ளன. அந்த வலைத்தளத்தின் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் கணக்குகள், தன்னை "இளைஞர்களின் அரசியல் முன்னணி, இளைஞர்களால், இளைஞர்களுக்காக" என்று விவரிக்கின்றன.
இது ஒரு நையாண்டி படைப்பு என்று அடிக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த இணையதளத்தை, அபிஜீத் திப்கே என அடையாளம் காணப்பட்ட ஒரு தனிநபர் உருவாக்கியுள்ளார். அவர் தன்னை "காக்ரோச் ஜனதா கட்சியின்" "நிறுவனர் தலைவர்" என்று அழைத்து கொள்கிறார்.
அந்த இணையதளத்தில், 'கட்சி' என்று அழைக்கப்படும் ஒன்றில் 'சேர்வதற்காக' மக்கள் நிரப்பக்கூடிய ஒரு படிவமும் உள்ளது.
2012-இல் டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிறரால் உருவாக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சிக்கு (AAP), இன்ஸ்டாகிராமில் 1.9 மில்லியன் பாளோயர்கள் உள்ளனர். இதே தளத்தில் பா.ஜ.க. கட்சிக்கு சுமார் 8.7 மில்லியன் பாளோயர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 13.2 மில்லியன் பாளோயர்களும் உள்ளனர்.