மேற்குவங்கத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

மேற்குவங்கத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டைப் போலவே மாணவிகள் அதிக சதவீத தேர்ச்சி.
மேற்குவங்கத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!
Published on

மேற்கு வங்க மேல்நிலைக் கல்வி வாரியம் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒட்டுமொத்தமாக 91.23% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 89.71% ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 92.47% ஆகவும் உள்ளது.

அத்ரிடோ பால் என்ற மாணவர் 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். அவரைத் தொடர்ந்து ஜிஷ்ணு குண்டு மற்றும் ரிதோபிரதா நாத் ஆகியோர் தலா 495 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தனர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே.8ம் தேதி வெளியாகின.

X

Maalai Malar
www.maalaimalar.com