ஆந்திராவில் பா.ஜ.க. கூட்டணிக்கு நடிகர் சிரஞ்சீவி ஆதரவு

பா.ஜ.க கூட்டணிக்கு ஆந்திர மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.பா.ஜ.க. கூட்டணி வேட்பாளருக்கு நடிகர் சிரஞ்சீவி ஆதரவு அளித்திருப்பது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திராவில் பா.ஜ.க. கூட்டணிக்கு நடிகர் சிரஞ்சீவி ஆதரவு
Published on

தெலுங்கு சினிமா மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி. பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை தொடங்கினார்.

தேர்தலில் தோல்வியை சந்தித்த அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைத்து மத்திய மந்திரியாக இருந்தார். பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி சினிமாவில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அனகா பள்ளி பாராளுமன்ற பா.ஜ.க வேட்பாளர் ரமேஷ் மற்றும் பெண்டுர்த்தி சட்டமன்ற ஜனசேனா கட்சி வேட்பாளர் ரமேஷ் பாபு ஆகியோர் நடிகர் சிரஞ்சீவியை விஜயவாடாவில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து ஆதரவு கேட்டனர்.

நீண்ட நேர இடைவெளிக்குப் பிறகு நான் அரசியல் பேசுகிறேன். இதற்கு காரணம் ஆந்திராவில் எனது சகோதரர் பவண் கல்யாண், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமைத்து இருப்பது வரவேற்கத்தக்கது.

எனது நண்பர் ரமேஷ் மற்றும் எனது ஆசியுடன் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய ரமேஷ்பாபு ஆகியோர் அனகா பள்ளி பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

பா.ஜ.க கூட்டணிக்கு ஆந்திர மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இதன் மாநிலம் முழுவதும் வளர்ச்சி அடையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பா.ஜ.க. கூட்டணி வேட்பாளருக்கு நடிகர் சிரஞ்சீவி ஆதரவு அளித்திருப்பது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com