சத்தீஸ்கர்: வேதாந்தா அனல்மின் நிலைய விபத்து - பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

உயிரிழந்தவா்கள் குடும்பத்துக்கு தலா ரூ.35 லட்சம், காயமடைந்தவா்களுக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்று வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது.
சத்தீஸ்கர்: வேதாந்தா அனல்மின் நிலைய விபத்து -  பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
Published on

சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில், சிங்கி தராய் பகுதியில் உள்ள வேதாந்தா அனல் மின் நிலையத்தில் நேற்று முன் தினம் (ஏப்ரல் 14) பாய்லர் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டது.

பிற்பகல் 2 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. வெடிப்பு நிகழ்ந்த நேரத்தில், அனைத்து தொழிலாளர்களும் ஆலைக்குள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பாய்லர் வெடித்தவுடன் அங்கிருந்த தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஓடியதால், நெரிசல் சூழல் ஏற்பட்டதில், சுமார் 30 முதல் 40 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர். 13 பேர் உயிரிழந்தனர்

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் 7 பேர் நேற்று உயிரிழந்தனர். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

சத்தீஸ்கா் மாநில அரசு சாா்பில் உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 இழப்பீடு அறிவிக்கப்பட்டது.

உயிரிழந்தவா்கள் குடும்பத்துக்கு தலா ரூ.35 லட்சம், காயமடைந்தவா்களுக்கு ரூ.15 லட்சம், அவா்கள் உடல்நிலை குணமடையும் வரை மாத சம்பளம், குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com