என் மலர்tooltip icon

    இந்தியா

    சத்தீஸ்கர்:  என்கவுன்டரில் 16 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
    X

    சத்தீஸ்கர்: என்கவுன்டரில் 16 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

    • பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே அவ்வப்போது என்கவுன்டர் நடைபெறுகிறது.
    • இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.

    இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் சத்தீஸ்கரும் ஒன்று. இங்கு நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு அதிரடிப் படைவீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நக்சலைட்டுகளுக்கு எதிரான இந்தத் தேடுதல் நடவடிக்கையின்போது அவ்வப்போது பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே என்கவுன்டர் நடைபெறுகிறது.

    சத்தீஸ்கரில் உள்ள சுக்மா மாவட்டத்தில் உள்ள கேர்லாபால் பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் 16 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.

    Next Story
    ×