சந்திரசேகர ராவை சந்தித்து நலம் விசாரித்தார் சந்திரபாபு நாயுடு

வீட்டின் குளியலறைக்கு சென்ற போது திடீரென வழுக்கி விழுந்தார்.சந்திரசேகர் ராவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சந்திரசேகர ராவை சந்தித்து நலம் விசாரித்தார் சந்திரபாபு நாயுடு
Published on

தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தனது வீட்டின் குளியலறைக்கு சென்ற போது திடீரென வழுக்கி விழுந்தார். கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக அவருக்கு இடதுபுற இடுப்பு எலும்பு மாற்றப்பட வேண்டும் என்றும், இது முழுமையாக குணமடைய ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, சந்திரசேகர் ராவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவை, ஆந்திரா மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com