கெஜ்ரிவாலை கொலை செய்ய மத்திய அரசு, டெல்லி போலீஸ் சதி: ஆம் ஆத்மி பரபரப்பு குற்றச்சாட்டு

பஞ்சாப் போலீஸ் வழங்கி வந்த பாதுகாப்பை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தல்.தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி கெஜ்ரிவாலுக்கு வழங்கி வந்த பாதுகாப்பை பஞ்சாப் போலீஸ் திரும்ப பெற்றது
கெஜ்ரிவாலை கொலை செய்ய மத்திய அரசு, டெல்லி போலீஸ் சதி: ஆம் ஆத்மி பரபரப்பு குற்றச்சாட்டு
Published on

பாஜக தலைமையிலான மத்திய அரசு மற்றும் டெல்லி போலீஸ் அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல சதி செய்வதாக ஆம் ஆத்மி கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. மேலும், பஞ்சாப் மாநில அரசால் வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மீண்டும் வழங்க தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு பாஜக அல்லது டெல்லி போலீஸ் தரப்பில் இருந்து உடனடியாக பதில் அளிக்கப்படவில்லை.

டெல்லி மாநில முதல்வர் அதிஷி, பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் சிங் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது "பிப்ரவரி 5-ந்தேதி நடைபெறும் டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மிக்கு சமநிலையான களம் தேவை. மற்றும் பஞ்சாப் போலீசார் வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மீண்டும் வழங்க வேண்டும்.

கெஜ்ரிவாலை கொலை செய்ய இரண்டு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பாஜக மற்றும் டெல்லி போலீஸ். இரண்டு பேரும் கெஜ்ரிவால் வாழ்வை முடிவுக்கு கொண்டுவர சதி செய்கின்றனர். அவர் மீது ஒன்றன் பின் ஒன்றாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் மீது தாக்குதல் நடத்தியது பாஜக தொண்டரக்ள் என எங்களுடைய விசாரணையில் தெரியவந்தது. ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கெஜ்ரிவாலுக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். எங்களுக்கு டெல்லி போலீசார் மீது நம்பிக்கை இல்லை. அது அமித் ஷாவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. கெஜ்ரிவாலின் பாதுகாப்பை திரும்பப் பெற்றது மோசமான அரசியல்" என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com