

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 3வது மொழி கட்டாயம் என மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், சிபிஎஸ்சி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
புதிய கல்விக்கொள்கையின்படி 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 மொழிகள் கற்பதை கட்டாயமாக்கி உள்ளது.
கட்டாய மும்மொழி திட்டம் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் 3 மொழிகளில், குறைந்தபட்சம் இரு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்கவேண்டும்.
மூன்றாவது மொழிக்கு 10-ம் வகுப்பில் பொதுத் தேர்வு கிடையாது என தெரிவித்துள்ளது.