பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் சி.பி.எஸ்.இ.-க்கு புதிய தலைவர் நியமனம்!

வேளாண்மை அமைச்சகத்திற்கு கூடுதல் செயலாளராக அனுப்பப்பட்டுள்ள ராகுல் சிங்குக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சி.பி.எஸ்.இ.
Published on

ஓ.எஸ்.எம். (OSM) முறை தொடர்பான முறைகேடுகள், குறிப்பாக சர்ச்சைக்குரிய ஒரு தனியார் நிறுவனத்திற்கு சி.பி.எஸ்.இ. ஒப்பந்தம் வழங்கிய விதம் ஆகியவை குறித்து சி.பி.எஸ்.இ. பெரும் சர்ச்சையை சமாளித்து வருகிறது.

இந்த நிலையில், சி.பி.எஸ்.இ. தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரசாந்த் சீதாராம் லோகண்டேவும், செயலாளராக 2008-ஆம் ஆண்டு இந்திய தகவல் சேவை அதிகாரியான வருண் பரத்வாஜும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்பு, 2001 AGMUT பிரிவைச் சேர்ந்த லோகண்டே, மத்திய உள்துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராக பணியாற்றி வந்தார். தற்போது வேளாண்மை அமைச்சகத்திற்கு கூடுதல் செயலாளராக அனுப்பப்பட்டுள்ள ராகுல் சிங்குக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சி.பி.எஸ்.இ. செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, பரத்வாஜ் கல்வி அமைச்சகத்தில் பணியாற்றினார். சி.பி.எஸ்.இ. எதிர்கொண்ட ஓ.எஸ்.எம். புயலுக்கு மத்தியில், நிர்வாக காரணங்களுக்காக அதன் தாய் அமைச்சகமான மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு 'முன்கூட்டியே திருப்பி அனுப்பப்படுவதற்கு' ஒப்புதல் அளிக்கப்பட்ட ஹிமான்ஷு குப்தாவிற்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சி.பி.எஸ்.இ.-இன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஓ.எஸ்.எம். (OSM) முறையை ஓர் நபர் கொண்ட குழு ஆய்வு செய்து வருகிறது. மேலும் அது தனது கண்டுபிடிப்புகளை விரைவில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும்.

இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு தேர்வுகளுக்காக, வாரியம் இந்த டிஜிட்டல் மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய முறையின் கீழ், மதிப்பீட்டாளர்கள் அசல் விடைத்தாள்களுக்கு பதிலாக, ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்களின் நகல்களை மதிப்பீடு செய்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com