சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 6-ம் வகுப்புக்கு மட்டுமே மும்மொழிக் கொள்கை: மத்திய அமைச்சர் விளக்கம்

நடப்பு கல்வி ஆண்டில் 7, 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கை பொருந்தாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்சி- தர்மேந்திர பிரதான்
சிபிஎஸ்சி- தர்மேந்திர பிரதான்
Published on

சி.பி.எஸ்.இ. கடந்த மே 15-ம் தேதியன்று வெளியிட்ட இந்த சுற்றறிக்கையில், தேசிய கல்விக் கொள்கை 2020, பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு 2023 ஆகியவற்றுக்கு இணங்க 2026-27 கல்வியாண்டு முதல் ஒன்பதாம் வகுப்புக்கான மொழிப் பாடத் திட்டத்தில் மாற்றங்களை அறிவித்தது.

அதன்படி, ஜூலை 1, 2026 முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மூன்று மொழிகளைப் படிக்க வேண்டும். அவற்றில் குறைந்தது இரண்டு மொழிகளேனும் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்று வாரியம் தெரிவித்திருந்தது.

சிபிஎஸ்இ-யின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெளிநாட்டு மொழிகளை தேர்வு செய்த ஒரு மாணவன் திடீரென இந்திய மொழிகளில் ஏதாவது ஒரு மொழி பாடத்தை படிப்பது எளிதானது அல்ல என்று அதிருப்தியை தெரிவித்தனர். மேலும், பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்தினர்.

இந்த நிலைியல், 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே மும்மொழி கொள்கை பொருந்தும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

நடப்பு கல்வி ஆண்டில் 7, 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கை பொருந்தாது. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் 7, 8 மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இரு மொழி கொள்கையின் அடிப்படையிலேயே 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு வரை தங்கள் கல்வியைத் தொடரலாம்.

இவ்வாறு தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com