

12-ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் கசிந்துள்ளதை சிபிஎஸ்இ வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது
விடைத்தாள்களை ஆன்லைனில் திருத்துவதற்கும் மதிப்பெண் வழங்குவதற்கும் பயன்படுத்தப்படும் ஆன்ஸ்கிரீன் மார்க்கிங் முறையான OSM System வலைத்தளத்தில் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பக் குறைபாடுகள் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
குறிப்பாக சிபிஎஸ்சி பயன்படுத்திய 'அமேசான் கிளவுட் ஸ்டோரேஜ்' அமைப்பில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக ஹேக்கரான 19 வயது இளைஞர் நிசர்கா அதிகாரி ஆதாரங்களுடன் குற்றம்சாட்டினார்.
டெல்லியை சேர்ந்த வேதாந்தா என்ற மற்றொரு மாணவர் தன் தேர்வு மதிப்பெண்களின் சந்தேகம் அடைந்து விடைத்தாளுக்கு விண்ணப்பித்து வாங்கியபோது அதில் இருந்த கையெழுத்து தனதில்லை என்றும் அது தன்னுடைய விடைத்தாளே அல்ல என்றும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து சிபிஎஸ்சி நடத்திய உள்விசாரணையில் OSM முறையில் குளறுபடிகள் கண்டறியப்பட்டதை சிபிஎஸ்சி ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த OSM அமைப்பின் தரவுப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்காக, கடந்த சில நாட்களாகப் பல்வேறு அரசு நிறுவனங்கள் மற்றும் IIT சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் அடங்கிய குழு தீவிரமாகப் பணியாற்றி வருவதாகச் சிபிஎஸ்இ வாரியம் குறிப்பிட்டுள்ளது.
தற்பொழுது கண்டறியப்பட்டுள்ள அனைத்து தொழில்நுட்பக் குறைபாடுகளும் முழுமையாகச் சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும், சிஸ்டத்தில் வேறு ஏதேனும் பாதுகாப்பு பிழைகள் இருந்தால் அவற்றை முற்றிலுமாக நீக்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வாரியம் தனது அறிக்கையில் உறுதி அளித்துள்ளது.