காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது

இது தொடர்பாக தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 4 மாநிலங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது
Published on

காவிரி நதி நீரை சுமுகமான முறையில் பகிர்ந்து கொள்வதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் காவிரி மேலாண்மை ஆணையமும். காவிரி ஒழுங்காற்றுக்குழுவும் அமைக்கப்பட்டது. இந்த 2 அமைப்புகளும் அவ்வப்போது கூடி நதிநீர் பிரச்சினைகளில் சமரச தீர்வை கண்டு வருகிறது. இந்த வகையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இதுவரை 50 முறை நடந்துள்ளது. 51-வது கூட்டம் வருகிற 28-ந்தேதியன்று நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் இந்த கூட்டத்தை அதற்கு முன்னதாக நடத்த முடிவு செய்து இன்று நடத்துவதாக மேலாண்மை ஆணையம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 4 மாநிலங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூட்டம் நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் நடைபெறும்.

இந்த கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் பற்றி பேசப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் கூட்டம் மீதான எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com