பக்தர்களுக்கு பணத்தை பிரசாதமாக வாரி வழங்கும் பூசாரி: வைரலாகும் வீடியோ

திருச்சி பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் பூசாரி ஒருவர் நாணயங்களை அள்ளிக் கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது
பக்தர்களுக்கு பணத்தை பிரசாதமாக வாரி வழங்கும் பூசாரி: வைரலாகும் வீடியோ
Published on

பொதுவாக பக்தர்கள் கோவிலுக்கு செல்லும்போது, அவர்கள்தான் கோவில் உண்டியல், அல்லது அர்ச்சகர் தட்டில் பணத்தை காணிக்கையாக செலுத்துவார்கள். ஆனால், திருச்சியில் உள்ள ஒரு கருப்பசாமி கோவிலில் பூசாரி பக்தர்களுக்கு பணம் வழங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

திருச்சி மாவட்டம் நாகையநல்லூர் கிராமத்தில் ஸ்ரீ வரதரம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த பகுதி மக்கள் தங்களின் காவல் தெய்வமாக கருப்பசாமியை வணங்கி வருகின்றனர்.

இக்கோவிலின் பூசாரிகள் பொதுவாக பிராமணர் அல்லாத சமூகங்களை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இங்கு நடைபெறும் சடங்குகளில் இறைச்சி, மதுபானம், சுருட்டுகள் போன்றவை படைக்கப்படுகின்றன.

இந்த கோவிலின் அர்ச்சகர் ஒருவர் சுருட்டை புகைத்தவாறு, காசுகளை அள்ளி பக்தர்களுக்கு கொடுக்கிறார். பொதுவாக பூசாரிகளுக்கதான் பக்தர்கள் காணிக்கை செலுத்துவார்கள். இங்கு பூசாரி பக்தர்களுக்கு பணம் வழங்குகிறார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com