இமாச்சல பிரதேசத்தில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து- 8 பேர் உயிரிழப்பு

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
car accident in himachal pradhesh
Published on

இமாசல பிரதேசத்தில் சம்பா மாவட்டத்தில் பனி அடர்ந்த பயிர்கார்ஹ்- சாக் பகுதியில், கார் ஒன்று சென்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக கார் நேற்று முன்தினம் இரவே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஆனால், நேற்று மதிய அளவிலேயே விபத்து பற்றி உள்ளூர்வாசிகளுக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் விரைவில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் சிக்கி 8 பேர் பலியாகி உள்ளது தெரியவந்தது. நேற்று மோசமான வானிலை காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில், இன்று காலை மீண்டும் மீட்பு பணிகள் தொடர்ந்தது.

சடலங்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com