உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்த்தப்படும் வகையில் அடுத்த கூட்டத்தொடரில் மசோதா கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Published on

இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தற்போது தலைமை நீதிபதி மற்றும் 33 நீதிபதிகள் உள்ளனர். அடுத்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது மேலும் 4 நீதிபதிகள் கூடுதலாக சேர்க்கப்படுவதற்கான மசோதா கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றியபின் எண்ணிக்கை 38 ஆக உயரும். 1956-ன் உச்சநீதிமன்றம் சட்டத்தின்படி தலைமை நீதிபதியை தவிர்த்து அதிகபட்சமாக 10 நீதிபதிகள் இருக்கலாம். 1960-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டு அது 13 ஆக அதிரிக்கப்பட்டது. பின்னர் 17 ஆக உயர்த்தப்பட்டது.

1986-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டது 25 ஆக உயர்த்தப்பட்டது. 2009-ல் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டு 30 ஆக அதிரிக்கப்பட்டது. கடைசியாக தலைமை நீதிபதியை தவிர்த்து 33 நீதிபதிகளாக உயர்த்த 2019-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com