மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

இதனால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
Published on

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 6,791 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின் மூலம் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபரில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 55 சதவீதத்திலிருந்து 58 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது மேலும் 2 சதவீதம் உயர்த்தப்பட்டு அது 60 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com