இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் 78-வது 'CA தினம்'!

ரத்த தான முகாம், மாரத்தான்.. அசத்தலாக அரங்கேறும் 78-வது 'சிஏ தின' கொண்டாட்டங்கள்!
CA Day Nationwide Celebration
Published on

இந்தியாவின் நிதிநிலைத் தன்மை மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மையைப் பாதுகாக்கும் பட்டயக் கணக்காளர்களைக் கௌரவிக்கும் வகையில், இன்று நாடு முழுவதும் 78-வது 'CA தினம்' உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

வரலாற்றுப் பின்னணி..

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, நாட்டின் கணக்கியல் துறையை முறைப்படுத்த ஒரு சட்டபூர்வ அமைப்பு தேவை என அரசு கூறியது. இதன்படி, கடந்த 1949 ஆம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் முறைப்படி தோற்றுவிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய கணக்கியல் அமைப்பாக விளங்கும் இந்த நிறுவனத்தின் தொடக்க தினமே, ஆண்டுதோறும் தேசிய CA தினமாகக் கொண்டாடப்படுகிறது.

முக்கியத்துவம் மற்றும் வாழ்த்துக்கள்..

வரி விதிப்பு, தணிக்கை, நிதி மேலாண்மை மற்றும் கார்ப்பரேட் ஆலோசனைகள் என நாட்டின் ஒவ்வொரு தொழில் துறையின் பின்னணியிலும் CA-க்களின் உழைப்பு முதன்மையாக உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வழிநடத்தும் இவர்களுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும், தொழில் அதிபர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com