

உத்தர பிரதேச மாநிலம் ஹாபுரில் பேருந்தும், லாரியும் நேருக்குநேர் மோதிய விபத்தில் 6 பேரி பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருமணம் வீட்டிற்கு சென்றவர்கள், திருமணம் முடிந்த பின்னர் பேருந்தில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த பேருந்தில் மணமகனின் தந்தையும் பயணம் செய்தார். ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கு பேருந்து சென்றபின், திடீரென எதிரே வந்த லாரியுடன் பேருந்து நேருக்கு நேர் மோதியது. இதில் பேருந்தின் முன் பாதி பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. அத்துடன் தலைகீழாக கவிழ்ந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே மாப்பிள்ளையின் தந்தை, பேருந்து டிரைவர் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் காயம் படுகாயம் அடைந்தனர். அவர்களை உள்ளூர் மக்கள் உதவியுடன் போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையில் பலரின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அப்பகுதி எஸ்.பி. தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் வேகமாக சென்ற லாரி சாலையோரத்தில் கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.