டெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து- சிறுமி பலி

கட்டட இடிபாடுகளில் இருந்து இதுவரை 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.இடிபாடுகளில் சிக்கி சிறியவர்கள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து- சிறுமி பலி
Published on

டெல்லியின் வடக்கு புராரியில் உள்ள கவுசிக் என்கிளேவில் நேற்று மாலை புதிதாக கட்டப்பட்ட 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டெல்லி காவல்துறை, டெல்லி தீயணைப்பு துறையினர், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இதனிடையே மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதியை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.

இந்த விபத்தில் 7 வயது சிறுமி உயிரிழந்தார். கட்டட இடிபாடுகளில் இருந்து இதுவரை 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இடிபாடுகளில் சிக்கி சிறியவர்கள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கட்டட விபத்தில் 12 பேர் பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் படுகாயம் அடைந்த 5 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கி சிறியவர்கள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com