17-ல் 12 இடங்களில் வெற்றி பெறுவோம்: சந்திரசேகர ராவ்

தெலுங்கானா தனி மாநிலம் என்பது என்னுடைய கனவு.தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
17-ல் 12 இடங்களில் வெற்றி பெறுவோம்: சந்திரசேகர ராவ்
Published on

பிஆர்எஸ் கட்சியின் தலைவரும், தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவ் கூறியதாவது:-

தெலுங்கானா தனி மாநிலம் என்பது என்னுடைய கனவு. தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது மக்கள் உணர்ந்துள்ளனர். காங்கிரஸ் மீது பயங்கர கோபமாக உள்ளனர். நாங்கள் 17 தொகுதிகளில் குறைந்தது 12 இடங்களிலாவது வெற்றி பெறுவோம்.

இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் பற்றி கூறுவது, மிகவும் முன் செயலாகும். தேர்தல் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி முழு மெஜாரிட்டியை பெறாது. பா.ஜனதா 272 இடங்களை பிடிக்காது.

இவ்வாறு சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com