உங்கள் மீதான நம்பிக்கை இழப்பு: ஆம் ஆத்மியில் இருந்து விலகிய 7 எம்.எல்.ஏ.-க்கள்- கெஜ்ரிவால் அதிர்ச்சி

மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் ராஜினாமா.தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் ராஜினாமா செய்துள்ளதால் கெஜ்ரிவால் அதிர்ச்சி.
உங்கள் மீதான நம்பிக்கை இழப்பு: ஆம் ஆத்மியில் இருந்து விலகிய 7 எம்.எல்.ஏ.-க்கள்- கெஜ்ரிவால் அதிர்ச்சி
Published on

டெல்லி சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி மாதம் 5-ந்தேதி நடைபெறுகிறது. இன்னும் தேர்தலுக்கு 5 நாட்களே உள்ளது. தேர்தல் பிரசாரம் நிறைவடைய 3 நாட்களே உள்ளன. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் 6 எம்.எல்.ஏ.-க்கள் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா ஆம் ஆத்மி கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்காததால் அதிருப்தியில் இருந்த நிலையில் நரேஷ் குமார், ரோகித் குமார, ராஜேஷ் ரிஷி, மதன் லான், பவன் ஷர்மா, பாவனா கவுட் ஆகியோர் எம்.எல்.ஏ.-க்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

ஏற்கனவே பூபிந்திர் சிங் சூன் ராஜினாமா செய்திருந்தார். இதனால் ராஜினாமா செய்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-க்களின் எண்ணிக்கை 7 ஆனது.

டெல்லி சட்டமன்ற தேர்தல் ஆம் ஆத்மி- பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

நரேஷ் யாதவ் "நேர்மையான அரசியல் என்ற அடிப்படை கொள்கையை ஆம் ஆத்மி கைவிட்டுள்ளது" எனக் குற்றம்சாட்டினார்.

பாவ்னா "உங்கள் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com