Assam Election 2026 | பா.ஜ.க. ஊடுருவல்காரர்களைத்தான் எதிர்க்கிறது, முஸ்லிம்களை அல்ல: நிதின் கட்கரி

அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்
Assam Election 2026 | பா.ஜ.க. ஊடுருவல்காரர்களைத்தான் எதிர்க்கிறது, முஸ்லிம்களை அல்ல: நிதின் கட்கரி
Published on

பாஜக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி, பாஜக-வுக்கு அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அசாமில் வருகிற 9-ந்தேதியும், மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29-ந்தேதியும் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக நிதின் கட்கரி கூறியதாவது:-

அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மதத்தை பாராமல் அனைவரையும் அரவணைத்து செல்வதுதான் பாஜக-வில் கொள்கை. நாங்கள் ஊடுருவல்காரர்களுக்கு எதிராக உள்ளோம். ஆனால் முஸ்லிம்களுக்கு எதிராக இல்லை.

அசாம் உள்ளிட்ட வடகிழக்கு பகுதிகளில் 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அசாமில் நிறைவடைந்துள்ளன. 2 லட்சம் கோடி மதிப்பலான திட்டங்கள் முடிவடையும் தருவாயில் உள்ளன.

இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com