பிபின் ராவத் இல்லத்திற்கு சென்றார் ராஜ்நாத் சிங்

நிலைமை குறித்து அறிந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை தளபதி விவேக் ராம் சௌத்ரியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்
Published on

புதுடெல்லி:

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில், டெல்லியில், பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.  

நிலைமை குறித்து அறிந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை தளபதி விவேக் ராம் சௌத்ரியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனையடுத்து ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்திற்கு விமானப்படை தளபதி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் பெங்களூருவில் இருந்து விமானப்படை அதிகாரிகள் குன்னூர் வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள பிபின் ராவத்தின் இல்லத்திற்கு ராஜ்நாத் சிங் சென்றார். 

விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார். மேலும் விபத்து குறித்து பாராளுமன்றத்தில் அரசு அறிக்கை வெளியிட உள்ளது. 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com