SC Notice | வாக்கு செலுத்த பயோ-மெட்ரிக் முறை... தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

பயோ-மெட்ரிக் முறையில் அடையாளம் காண உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் மனுத்தாக்கல்.
SC Notice | வாக்கு செலுத்த பயோ-மெட்ரிக் முறை... தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
Published on

இந்தியாவில் தேர்தல் சமயங்களில் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் அடையாளத்தை பயோ-மெட்ரிக் முறையில் உறுதி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இதுகுறித்து பதிலளிக்க நோட்டீஸ் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதியும், மேற்கு வங்கம் மாநிலத்தில் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலின் போதே வாக்காளர்களின் அடையாளத்தை பயோ-மெட்ரிக் முறையில் அடையாளம் காண உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் அஸ்வினி உபத்யாய் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "சில மாநிலங்களில் தேர்தல் நடைமுறைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், பயோ-மெட்ரிக் முறையை அமல்படுத்துவது நடைமுறைக்கு உகந்ததாக இருக்காது" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

இதற்கு, "தற்போது இதுபோ்ற நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோரவில்லை. மாறாக, இந்த விவகாரத்தை பரிசீலிக்கும் வகையில் எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று மட்டுமே கருதுகிறேன்" என்று மனுதாரர் பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து, "அடுத்த நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டுமா என்பதை இந்திய தேர்தல் ஆணையமே தீர்மானிக்க வேண்டும். எனவே நோட்டீஸ் அனுப்பப்படுகிறது," என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பான நோட்டீஸ் இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com