பீகாரில் 2ம் கட்ட வாக்குப்பதிவு- காலை 11 மணி வரை 31.38 சதவீத வாக்குப்பதிவு

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. சுமார் 4 லட்சம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பீகாரில் 2ம் கட்ட வாக்குப்பதிவு- காலை 11 மணி வரை 31.38 சதவீத வாக்குப்பதிவு
Published on

பீகார் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டசபை தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின.

இதனை தொடர்ந்து மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 3 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 45 ஆயிரத்து 399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த சுமார் 4 லட்சம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில், 122 தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் காலை 11 மணி நிலவரப்படி 31.38 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com