மேற்கு வங்கத்தில் வெளிப்படையான வாக்கு எண்ணிக்கைக்காக கூடுதல் பார்வையாளர்களை நியமித்த தேர்தல் ஆணையம்

மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை வெளிப்படையாக நடைபெற கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் வெளிப்படையான வாக்கு எண்ணிக்கைக்காக கூடுதல் பார்வையாளர்களை நியமித்த தேர்தல் ஆணையம்
Published on

மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில், நாளைமறுதினம் வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன. வாக்கு இயந்திரங்கள் உள்ள மையத்தில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெளிப்படையான வாக்கு எண்ணிக்கைக்காக கூடுதலாக தேர்தல் பார்வையாளர்களை நியமித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.

165 கூடுதல் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் மற்றும் 77 போலீஸ் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்கள் கொண்ட தொகுதியில் இந்த பார்வையாளர்கள் குவிக்கப்பட இருக்கிறார்கள்.

போலீஸ் பார்வையாளர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்வார்கள்.

ஏற்கனவே, தேர்தல் அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்ட QR கோடு அடிப்படையிலான போட்டோ ஐ.டி. இருப்பவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரி ஆகியோரை தவிர்த்த மற்ற அனைத்து நபர்களும் செல்போன் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com