

இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ஈத் அல்-அதா என்றும் அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை நெருங்கி வருவதையடுத்து, ஆடு மற்றும் செம்மறி ஆட்டுச் சந்தைகள் வழக்கம்போல பரபரப்புடன் காணப்படுகிறது.
இந்த ஆண்டு விண்ணை முட்டும் அளவிற்கு விலையேற்றம் அடைந்துள்ளதால், ஆடு விற்பனையில் வர்த்தகம் பெருமளவில் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஐதராபாத்தில் உள்ள டோலிச்செளக்கி சந்தையில் ஆடு மற்றும் செம்மறி ஆடுகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக மக்கள் கூறினர்.
எரிபொருள் விலை உயர்வை தொடர்ந்து, போக்குவரத்து செலவும் அதிகரித்து ஆடுகளின் தீவனச் செலவு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாகவே ஆட்டுச் சந்தையிலும் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ரூ.20,000 ஆக இருந்த சரக்கு கட்டணம், தற்போது ரூ.28,000 ஆக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் கடந்த ஆண்டு இரண்டு ஆடுகளை வாங்கியவர்கள் இந்த முறை ஒரு ஆடு மட்டுமே வாங்குவதாகவும் தெரிவித்தனர்.