Hatrik: கட்சித் தாவல்.. தொகுதி மறுவரையரை.. 'மியா' பயம் - அசாமில் பாஜக தொடர் வெற்றி சாத்தியமானது எப்படி?

2023ல் நடத்தப்பட்ட தொகுதி மறுவரையறைக்குப் பிறகு நடந்த முதல் தேர்தல் இதுவாகும்.
இடது - இஸ்லாமியர்களை குறிவைத்து சுடுவதுபோல் ஹிமாந்தா வெளியிட்ட சர்ச்சை வீடியோ
இடது - இஸ்லாமியர்களை குறிவைத்து சுடுவதுபோல் ஹிமாந்தா வெளியிட்ட சர்ச்சை வீடியோ
Published on

அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக 82 இடங்களை கைப்பற்றியதன் மூலம் மூன்றாவது முறையாகத் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. காங்கிரஸ் 21 இடங்களில் வென்றுள்ளது.

முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் இது இரண்டாவது வெற்றி ஆகும்.

ஹிமாந்தா தனது ஜலுக்பாரி தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஜோர்ஹாட் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் கௌரவ் கோகோய் தோல்வியடைந்தது எதிர்க்கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸின் பலமாக இருந்த Upper Assam மற்றும் பழங்குடியினப் பகுதிகளில் இந்த முறை பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு வந்த பூபன் போரா மற்றும் கமலாக்யா டே புர்கயஸ்தா போன்றவர்களும் பாஜக சார்பில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

2023ல் நடத்தப்பட்ட தொகுதி மறுவரையறைக்குப் பிறகு நடந்த முதல் தேர்தல் இதுவாகும். இதில் அங்குள்ள மொத்தம் 126 தொகுதிகள் அதிகரிக்கவோ குறையவோ இல்லை என்றாலும் அந்த தொகுதிகளின் எல்லை வரையறைகள் மாறின.

குறிப்பாக இதன் மூலம் சிறுபான்மையின வாக்குகள் சில குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள தொகுதிகளில் மட்டுமே குவிந்தது. இதுவும் பாஜகவின் தற்போதைய வெற்றிக்கு காரணமாக கருதப்படுகிறது.

அசாம் மக்கள் தொகையில் 34% உள்ள முஸ்லிம் வாக்காளர் உள்ளனர். இஸ்லாமியர்களுக்கு எதிரான தனது தொடர் வெறுப்பு பேச்சு மற்றும் செயல்பாடுகள் மூலம் இந்து வாக்குகளை ஒருங்கிணைக்கும் ஹிமந்தாவின் தீவிரமான தேர்தல் வியூகம் பாஜகவுக்குப் பெரிய வெற்றியைத் தேடித்தந்துள்ளது.

மேலும் 2021ல் காங்கிரஸுடன் இருந்த 'போடோலாந்து மக்கள் முன்னணி' (BPF) கட்சியை தனது பக்கம் இழுத்த ஹிமந்தா, போடோலாந்து பகுதிகளில் பாஜகவின் வெற்றியை உறுதி செய்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது 'மியா' முஸ்லிம்கள் மற்றும் வங்கதேச குடியேறிகளுக்கு எதிராக ஹிமந்தா, மோடி, அமித் ஷா ஆற்றிய உரைகள் விவாதங்களை ஏற்படுத்தின.

'நில ஜிகாத்' மற்றும் 'லவ் ஜிகாத்' ஆகியவற்றுக்கு எதிராகச் சட்டம் கொண்டுவரப்படும் என்ற ஹிமாந்தாவின் வாக்குறுதிகள் மக்களிடம் வேலை செய்துள்ளது.

ஹிமாந்தா பிஸ்வா சர்மாவின் மனைவி, இந்திய குடியுரிமையுடன் சேர்ந்து ஐக்கிய அரபு அமீர்கம், எகிப்து குடியுரிமை, துபாய் கோல்டன் விசா, துபாய் மற்றும் அமெரிக்காவில் சொத்துக்கள் வைத்துள்ளதாக காங்கிரஸ் முன்வைத்த குற்றச்சாட்டுகள் இந்த தேர்தலில் எடுபடவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com