சட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1,000 கோடி பறிமுதல்!

பறக்கும் படை சோதனையில் இரு மாநிலங்களில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான ரொக்கம் மற்றும் பொருள்கள் பறிமுதல்.
சட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1,000 கோடி பறிமுதல்!
Published on

தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில், ரூ. 1000 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதில், தமிழ்நாட்டின் மொத்த பறிமுதல் மதிப்பு ரூ.599.24 கோடி எனவும், மேற்கு வங்கத்தில் ரூ.472.89 கோடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொக்கம், மதுபானம், போதைப்பொருள், இலவசங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே.4 வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com