180 சிறுமிகளிடம் அத்துமீறல்.. 350 ஆபாச வீடியோக்கள் - மகாராஷ்டிர இளைஞர் கைது - வீடு இடிப்பு

வாட்ஸ் அப், ஸ்னாப்சாட் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் இளம் பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளிடம் ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றியுள்ளார்
180 சிறுமிகளிடம் அத்துமீறல்.. 350 ஆபாச வீடியோக்கள் - மகாராஷ்டிர இளைஞர் கைது - வீடு இடிப்பு
Published on

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள பரத்வாடா நகரை சேர்ந்த இளைஞர் முகமது அயாஸ்.

இவர், வாட்ஸ் அப், ஸ்னாப்சாட் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் இளம் பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளிடம் ஆசை வார்த்தைகளை கூறி தனியாக அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

அதை வீடியோக்களாக பதிவு செய்து அந்த பெண்கள் மற்றும் சிறுமிகளை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபட முகமது அயாஸ் கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதில் சில வீடியோக்களை அவர் இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மாநிலங்களவை எம்.பி. அனில் போண்டே அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், முகமது அயாசை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட முகமது அயாசின் செல்போனில் சுமார் 180 சிறுமிகளின் 350 க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன.

கைது செய்யப்பட்ட முகமது அயாசை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், பரத்வாடா பகுதியில் உள்ள முகமது அயாசின் வீட்டில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறி, வீட்டின் ஒரு பகுதியை ஜே.சி.பி. மூலம் மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com