அசாம் போலீஸ் முகாம் மீது தாக்குதல் நடத்திய உல்ஃபா அமைப்பினர்

அசாம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், உல்ஃபா அமைப்பைச் சேர்ந்தவர்கள் போலீஸ் முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்
அசாம் போலீஸ் முகாம் மீது தாக்குதல் நடத்திய உல்ஃபா அமைப்பினர்
Published on

அசாம் மாநிலத்தில் அடுத்த மாதம் 9-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தற்போது வேட்புமனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி (ஐ) என்ற பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்தவர் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள அசாம் போலீஸ் கமாண்டோ முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பின்னால் உள்ளவர்களை கைது செய்யும் வகையில், எதிர் நடவடிக்கை தொடக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை 2.30 மணிக்கு இந்த தாக்குதல் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், 7 பேர் கொண்ட கும்பல் கையெறி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும், போலீசார் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும். அருணாச்சல பிரதேச எல்லை வழியாக தப்பி ஓடியதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 4 போலீசார் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com