5 ஆண்டுகளில் இரட்டிப்பான அசாம் முதல்வர் ஹிமாந்தா சொத்து மதிப்பு!

ஜலுக்பாரி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்.
5 ஆண்டுகளில் இரட்டிப்பான அசாம் முதல்வர் ஹிமாந்தா சொத்து மதிப்பு!
Published on

அசாம் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 9 அன்று நடைபெறவுள்ளது. அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஜலுக்பாரி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

நேற்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனுவில் குறிப்பிடப்பட்ட சொத்து விவரம் மூலம் அவரின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகி உள்ளது தெரியவந்துள்ளது.

2021ல் தேர்தலின்போது ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் அவர் மனைவி ரினிகி புயான் சர்மா ஆகியோரின் மொத்த சொத்து ரூ.17.27 கோடி ஆக இருந்தது.

அதே தற்போது 2026இல் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஹிமாந்தா மற்றும் அவரின் மனைவியின் மொத்த குடும்ப சொத்து மதிப்பு ரூ.35.16 கோடியாக அதிகரித்துள்ளது.

2016-ல் இவர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.6.4 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com