ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்கவேண்டும்: அசாம் முதல் மந்திரி கோரிக்கை

தமிழகம், மேற்கு வங்கத்தில் அதிக சதவீதத்தில் வாக்குகள் பதிவாகி உள்ளது.
ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்கவேண்டும்: அசாம் முதல் மந்திரி கோரிக்கை
Published on

தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் வழக்கத்துக்கு மாறாக, அதிகமான சதவீதத்தில் வாக்குகள் பதிவாகி உள்ளது.

இதையடுத்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தமிழகம், மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு வாக்காளருக்கும் ஆணையத்தின் சல்யூட் என தெரிவித்தார்.

இந்நிலையில், அசாமில் செய்தியாளர்களுடன் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைத் திறம்பட நடத்தியதற்காக ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட வேண்டும்.

அசாமில் பா.ஜ.க. 100 இடங்களையும், மேற்கு வங்கத்தில் 200 இடங்களையும் பிடிக்கும்.

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் பா.ஜ.க. வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்டப்படும் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com