ஓட்டல் பில்லில் உணவக ஊழியரின் ஓவியத்தை வரைந்த கலைஞர்

ஓட்டல் பில்லின் பின்புறத்தில் தனக்கு உணவு பரிமாறிய ஊழியரின் ஓவியத்தை அச்சு அசலாக அப்படியே வரைந்து அந்த ஊழியரிடமே அவர் கொடுக்கிறார். தனது படத்தை பார்த்த உணவக ஊழியர் மகிழ்ச்சியில் சிரிக்கும் காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்கிறது.
ஓட்டல் பில்லில் உணவக ஊழியரின் ஓவியத்தை வரைந்த கலைஞர்
Published on

பார்ப்பவர்களை அப்படியே ஓவியமாக வரைவது ஓவிய கலைஞர்களுக்கு சாதாரணமானது தான் என்றாலும், எளியவர்களின் படத்தை வரைந்து அவர்களுக்கு கொடுக்கும் போது அந்த ஓவியம் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

அந்த வகையில், ஒரு ஓவிய கலைஞர் ஓட்டல் பில்லில் உணவக ஊழியர் ஒருவரின் படத்தை வரைந்து கொடுக்கும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. ஆகாஷ் செல்வராசு என்ற ஓவியர் ஒரு சாதாரண ஓட்டலுக்கு செல்வது போன்று வீடியோ தொடங்குகிறது.

பின்னர் ஓட்டல் பில்லின் பின்புறத்தில் தனக்கு உணவு பரிமாறிய ஊழியரின் ஓவியத்தை அச்சு அசலாக அப்படியே வரைந்து அந்த ஊழியரிடமே அவர் கொடுக்கிறார். தனது படத்தை பார்த்த அந்த உணவக ஊழியர் மகிழ்ச்சியில் சிரிக்கும் காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்கிறது.

இதுவரை 67 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்த இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் ஓவியரின் திறமையை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com