உதம்பூரில் துப்பாக்கிச் சண்டை... பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் ராணுவ வீரர் உயிரிழப்பு

பாதுகாப்பு படையினர் மீது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
உதம்பூரில் துப்பாக்கிச் சண்டை... பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் ராணுவ வீரர் உயிரிழப்பு
Published on

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து காஷ்மீர் முழுவதும் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள துடு-பசந்த்கர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்பு படையினர் மீது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். உடனே பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

இதையடுத்து பசந்த்ஃகர் என்ற இடத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை தேடியபோது துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த ஒயிட் நைட் கார்ப்ஸ் படை வீரர் வீர மரணமடைந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com