EPFO போர்டல் 3 நாட்களுக்கு இயங்காது என அறிவிப்பு!

புதிய PF Claim-கள், முன்பணம், கணக்கு பரிமாற்றம் போன்ற சேவைகளை ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது.
EPFO போர்டல் 3 நாட்களுக்கு இயங்காது என அறிவிப்பு!
Published on

வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெறுவதற்காக EPFO போடர்ல் மூலம் சந்தாதரர்கள் பணம் பெற்று வருகின்றனர். இதனால் EPFO ​​தனது இணையவழிச் சேவைகளை வேகமாகவும், பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் வழங்குவதற்காகக் கணினி அமைப்புகளை மேம்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, இணையதளச் சேவைகள் 3 நாட்களுக்கு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மென்பொருள், தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் காரணமாக இன்று முதல் வருகிற 28-ந்தேதி EPFO போர்டல் மூலமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் புதிய PF Claim-கள், முன்பணம், கணக்கு பரிமாற்றம் போன்ற சேவைகளை ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. ஏற்கனவே சமர்பிக்கப்பட்ட Claim-கள் ரத்து செய்யப்படாது என்றும், மாற்றுத் தேவைகளுக்கு SMS, Missed Call (9966044425), உதவி எண் (14470), வாட்ஸ்அப் மூலம் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com