ஆந்திராவில் 4-வது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெற்றோருக்கு ரூ. 40 ஆயிரம்: சந்திரபாபு நாயுடு

4-வது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெற்றோருக்கு 40 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஆந்திர மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
ஆந்திராவில் 4-வது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெற்றோருக்கு ரூ. 40 ஆயிரம்: சந்திரபாபு நாயுடு
Published on

ஆந்திராவில் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் பெற்றோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

2-வது குழந்தைக்கு 25 ஆயிரும் ரூபாயும், 3-வது குழந்தைக்கு 30 ஆயிரம் ரூபாயும், 4-வது குழந்தைக்கு 40 ஆயிரம் வழங்கப்படும். ஆந்திரா முதியோர்களின் மாநிலமாக மாறாமல் இருக்க, இளைஞர்களின் சக்தியை பெருக்க வேண்டும். குழந்தைகள் சுமையாக இருக்கமாட்டார்கள். அவர்கள் மாநிலத்தின் சொத்து என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 2-வது குழந்தை பெற்றெடுக்கும் பெற்றோருக்கு 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பான முழு விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com