

2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.
அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் அறிவித்தார்.
இதில், முக்கிய அறிவிப்பாக "தனிநபருக்கான வருமான வரி உச்சவரம்பு 7 லட்சத்தில் இருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி மாதம் 1 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் வரி கட்ட தேவையில்லை" என்று அறிவித்தார்.
இந்நிலையில், நடுத்தர மக்களின் நலன் கருதி பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடியின் இதயத்தில் எப்போதும் இருப்பவர்கள் நடுத்தர வர்க்கத்தினர்தான்.
ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை.
முன்மொழியப்பட்ட வரி விலக்கு நடுத்தர வர்க்கத்தினரின் நிதி நல்வாழ்வை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும். இந்த சந்தர்ப்பத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
The middle class is always in PM Modi's heart.Zero Income Tax till ₹12 Lakh Income.The proposed tax exemption will go a long way in enhancing the financial well-being of the middle class. Congratulations to all the beneficiaries on this occasion.#ViksitBharatBudget2025