

புதுடெல்லி:
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியது. கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.
இதற்கிடையே, டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்து 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி இன்று பதவியேற்றார்.
இந்நிலையில், ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, சிவராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்பட பலர் மத்திய மந்திரிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.