அம்பேத்கர் ஜெயந்தி: பாராளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் படத்திற்கு தலைவர்கள் மரியாதை

குஜராத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு, அங்கு அம்பேத்கர் படத்திற்கு மாலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அம்பேத்கர் ஜெயந்தி: பாராளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் படத்திற்கு தலைவர்கள் மரியாதை
Published on

இந்திய அரசியலமைப்பின் தந்தை அண்ணல் அப்தேகர் உடைய 135 வது பிறந்தநாள் இன்று (ஏப்ரல் 14) கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாராளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் உருவப் படத்திற்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

குஜராத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு, அங்கு அம்பேத்கர் படத்திற்கு மாலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் குடியிருப்பில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடந்த வழிபாட்டில் மோடி கலந்துகொண்டார்.

மேலும் தனது எக்ஸ் பக்கத்தில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை அவர் தெரிவித்துக்கொண்டார்.

அதேபோல் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் ஆளுமையும் படைப்புகளும் தேச நிர்மாணத்திற்குத் தொடர்ந்து உத்வேகமாகத் திகழும்.

சுயநலமாக இருப்பது குறுகிய அறிவுடையோர் செயல், உயரிய நற்பண்புகள் கொண்டோருக்கு, இவ்வுலகமே ஒரு குடும்பமாகும்." என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com