ரூ.1000 கோடி வைர நகைகளுடன் ஜொலிக்கும் அம்பானி குடும்பம்

முகேஷ் அம்பானி, நீதா அம்பானி, மகள், மகன்கள், மருமகள்கள் ஆடம்பர உடைகள் அணிந்த குரூப் போட்டோக்கள் வெளியாகினஉயர் ரக வைர நகைகள், அணிந்து ஜொலிப்பது போன்ற படங்கள் இணைய தளத்தில் வெளியாகி வைரலாகிறது
ரூ.1000 கோடி வைர நகைகளுடன் ஜொலிக்கும் அம்பானி குடும்பம்
Published on

இந்தியாவின் பெரும் தொழிலதிபரும், பெரும் பணக்காரருமானவர் முகேஷ் அம்பானி. இவரது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் - ராதிகா மெர்சன்டிற்கும் ஜூலை 12- ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது.

இந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்ச்சிகுஜராத் ஜாம்நகரில் ரிலையன்ஸ் கிரீன்ஸ் வளாகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 3- ந் தேதி வரை 3 நாட்கள் நடந்தது. இந்த விழாவில் பாலிவுட் பிரபலங்களின் பிரம்மாண்ட ஆடம்பர கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் பங்கேற்றனர். ரஜினி தனது குடும்பத்துடன் தனி விமானத்தில் குஜராத் சென்று மணமக்களை வாழ்த்தினார்.

மேலும், உலகம் முழுவதும் இருந்து முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள், முன்னணி பாலிவுட் நடிகர், நடிகைகள் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த விழா தொடர்பான வீடியோக்கள், புகைப் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதனை உலகம் முழுவதும் அனைவரும் பார்த்து வியந்தனர். அம்பானி குடும்பத்தினர் முகேஷ் அம்பானி, நீதா அம்பானி, மகள், மகன்கள், மருமகள்கள் உள்ளிட்ட அனைவரும் விலை உயர்ந்த ஆடம்பர உடைகள் அணிந்த குரூப் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகின.

சுமார் ரூ.1000 கோடி மதிப்பிலான உயர் ரக வைர நகைகள், அணிந்து ஜொலிப்பது போன்ற படங்கள் தற்போது இணைய தளத்தில் வெளியாகி வைரலாகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com