அமர்நாத் யாத்திரை : முதல் நாளிலேயே 12,000-க்கும் அதிகமானோர் பனி லிங்க தரிசனம்!

பக்தர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் செய்துள்ளது.
Amarnath Yatra
Published on

புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை நேற்று தொடங்கியது. 57 நாட்கள் நடைபெற உள்ள இந்த ஆண்டுக்கான புனிதப் பயணத்தின் முதல் நாளிலேயே, 12000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் 3,800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குகைக் கோயிலில் பனி சிவலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.

இரு வழிகளில் தொடங்கிய பயணம்..

தெற்கு காஷ்மீர் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள இந்தத் திருத்தலத்திற்கு, நேற்று அதிகாலையிலேயே பக்தர்கள் தங்களின் பயணத்தைத் தொடங்கினர். அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள 48 கி.மீ நீளமுள்ள பாரம்பரிய 'நுன்வான்-பகல்காம்' வழி மற்றும் காந்தர்பால் மாவட்டத்தில் உள்ள செங்குத்தான, குறுகிய 14 கி.மீ நீளமுள்ள 'பால்தல்' வழி என இரு பாதைகளிலும் ஒரே நேரத்தில் யாத்திரை தொடங்கியது.

பக்தர்களின் விவரம்..

அமர்நாத் யாத்திரையின் முதல் நாளில் மட்டும் சுமார் 12,000 பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசித்து சிவபெருமானை வழிபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடக்க நாள் வழிபாட்டில் பங்கேற்ற ஒட்டுமொத்தப் பக்தர்களில் சுமார் 9,350 ஆண்களும், 2,250 பெண்களும், 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் அடங்குவர்.

இவர்களுடன் 70 சாதுக்கள், 9 திருநங்கை பக்தர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 260-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்களும் முதல் நாளிலேயே குகைக் கோயிலுக்குச் சென்று புனித தரிசனம் செய்துள்ளனர்.

பக்தர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com