மகாராஷ்டிராவில் பரபரப்பு- சரத் பவாரை சந்தித்தார் அஜித் பவார்

துணை முதல்வராக பதவி ஏற்ற பிறகு, அஜித் பவார் மற்றும் அணியினர் முதல் முறையாக சரத் பவாரை சந்தித்துள்ளனர்.சரத் பவாரை மாநில செயலகம் 'மந்த்ராலயா' அருகே அமைந்துள்ள ஒய்.பி சவான் மையத்தில் சந்தித்தார்.
மகாராஷ்டிராவில் பரபரப்பு- சரத் பவாரை சந்தித்தார் அஜித் பவார்
Published on

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் பாஜக கூட்டணியில் அஜித் பவார் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

பின்னர், அஜித் பவார் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக பதவி ஏற்றார். இதுபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களும் அங்கிருந்து பிரிந்து ஆளும் கட்சியில் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

இதனால் மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், அஜித் பவார் மற்றும் அவரது தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் சிலரும் இன்று மும்பையில் என்சிபி தலைவர் சரத் பவாரை சந்தித்துள்ளனர்.

துணை முதல்வராக பதவி ஏற்ற பிறகு, அஜித் பவார் மற்றும் அணியினர் முதல் முறையாக சரத் பவாரை சந்தித்து பேசியுள்ளனர்.

அஜித் பவார் என்சிபி அமைச்சர்கள் ஹசன் முஷ்ரிப், சகன் புஜ்பால், அதிதி தட்கரே மற்றும் திலீப் வால்ஸ் பாட்டீல் ஆகியோருடன் சரத் பவாரை மாநில செயலகம் 'மந்த்ராலயா' அருகே அமைந்துள்ள ஒய் பி சவான் மையத்தில் சந்தித்தார்.

என்சிபி மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் மற்றும் கட்சியின் தலைவர் ஜிதேந்திர அவாத் ஆகியோரும் ஒய்.பி சவான் மையத்திற்கு விரைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com