என் மலர்
இந்தியா

விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழப்பு - மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு இரங்கல்
- விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார்
- பொது வாழ்வில் பவாரின் பங்களிப்புகள் நினைவுகூரப்பட வேண்டும்.
மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார் (66) சென்ற விமானம் இன்று காலை தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.
இந்த விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார். மேலும் இந்த விமான விபத்தில் அஜித் பவார் உட்பட 3 பயணிகளும், 2 விமானிகளும் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் மரணத்திற்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், அஜித் பவார் மரணத்திற்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இன்று காலை பாராமதியில் நடந்த விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும், இந்த இழப்பால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். பொது வாழ்வில் பவாரின் பங்களிப்புகள் நினைவுகூரப்பட வேண்டும். இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினர் மன வலிமையைப் பெற வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.






