அதானியை உடனடியாக கைது செய்க... ராகுல் காந்தி வலியுறுத்தல்

முறைகேடு வழக்குகளில் நாட்டின் முதலமைச்சரே கைது செய்யப்படும்போது அதானி சுதந்திரமாக சுற்றுவது ஏன்?பிரதமர் மோடியும், அதானியும் ஒன்றாக இருப்பதால் அவர்கள் இந்தியாவில் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.
அதானியை உடனடியாக கைது செய்க... ராகுல் காந்தி வலியுறுத்தல்
Published on

காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* அதானிக்கு எதிராக நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதால் அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவரது பாதுகாவலர் மாதாபி பூரி புச் மீது விசாரணை நடத்த வேண்டும்.

* நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மக்களுக்கு வெளிப்படுத்துவது காங்கிரசின் கடமை.

* முறைகேடு வழக்குகளில் நாட்டின் முதலமைச்சரே கைது செய்யப்படும்போது அதானி சுதந்திரமாக சுற்றுவது ஏன்?

* எதிர்க்கட்சி தலைவராக நான் மக்களவையில் இந்த விவகாரத்தை எழுப்புவேன்.

* இந்தியாவில் அதானி கைது செய்யப்படமாட்டார். அல்லது விசாரணைக்கு உள்ளாக்கப்படமாட்டார். ஏனென்றால் அரசு அவரை காக்கிறது. இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

* பிரதமர் மோடியும், அதானியும் ஒன்றாக இருந்தால் அவர்கள் இந்தியாவில் பாதுகாப்பாக இருப்பார்கள்.

* இந்தியா மற்றும் அமெரிக்காவின் சட்டத்தை மீறியுள்ளார் என்பது நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது மூலம் தெளிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com