அம்பானியை பின்னுக்கு தள்ளி பணக்காரர் பட்டியலில் முதலிடத்தை பிடித்த அதானி!

கௌதம் அதானி, முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி மீண்டும் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார்.
அம்பானியை பின்னுக்கு தள்ளி பணக்காரர் பட்டியலில் முதலிடத்தை பிடித்த அதானி!
Published on

கௌதம் அதானி மீண்டும் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் மற்றும் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்ற முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

சமீபத்திய கோடீஸ்வரர்கள் தரவரிசைப் பட்டியலின்படி, 92.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அதானி, 90.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டுள்ள அம்பானியை பின்னுக்குத் தள்ளி, இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆகியுள்ளார்.

அதானி குழுமத்தின் உள்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் எரிசக்தி மாற்றம் தொடர்பான பங்குகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்ததே இதற்குக் காரணம். கடந்த ஆண்டில் அதானி குழுமத்தின் பங்குகள் பல மடங்கு வளர்ச்சி கண்டுள்ளன, குறிப்பாக அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் போன்ற பங்குகள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நடப்பாண்டில் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் சற்று குறைந்ததால், அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் $16.9 பில்லியன் சரிவைச் சந்தித்துள்ளது. அதானி மற்றும் அம்பானிக்கு அடுத்து லட்சுமி மிட்டல் ($36.9 பில்லியன்) மற்றும் ஷிவ் நாடார் ($33.5 பில்லியன்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com