திருப்பதி அருகே ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம்

சூலூர்பேட்டை அருகே செல்லும்போது மதினாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.108 ஆம்புலன்ஸ் மூலம் தாய் மற்றும் குழந்தையை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
திருப்பதி அருகே ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம்
Published on

திருப்பதி:

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் யபாபி. இவருடைய மனைவி மதினா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். யபாபி பெங்களூரில் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் மதீனா 3-வதாக கர்ப்பமானார். நேற்று யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சூலூர்பேட்டை அருகே செல்லும்போது மதினாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

அப்போது பயணிகள் சிலர் அவருக்கு பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் ரெயில் சூலூர்பேட்டை வந்ததும் அங்கு தயாராக இருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் தாய் மற்றும் குழந்தையை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com